குடியிருப்பு அடிப்படையில் குத்தகைக்கு பெற்றுக்கொள்ளப்பட்ட அரசாங்க காணிக்கான அளிப்புப் பத்திரமொன்று எவ்வாறு பெற்றுக்கொள்ளப்படுகின்றது?
- அரச காணியின் ஒரு பகுதியினை வழங்குவதற்காக நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட திகதியிலிருந்து பத்து (10) வருட காலம் கடந்திருந்தால்,
- வசிக்கும் காணிக்காக குத்தகை அங்கீகாரம் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதுடன் அதற்காக தெரிவு செய்யப்பட்டு பத்து (10) வருட காலம் கடந்திருந்தால்,
- வசிக்கும் காணிக்காக குத்தகை வழங்கப்பட்டுள்ளதுடன் அதை வழங்கி ஐந்து (5) வருட காலம் கடந்திருந்தால்
உங்களுக்கு அளிப்புப் பத்திரமொன்றை பெற்றுக்கொள்வதற்கு பிரதேச செயலாளரிடம் விண்ணப்பிக்கமுடியும்.
வெளிநாட்டு நபர்களுக்கு அரசாங்க காணியொன்றை குத்தகைக்கு பெற்றுக்கொள்ள முடியுமா?
இலங்கை பிரஜை அல்லாத மற்றும் இலங்கை பிரஜை உரிமை இழக்கப்பட்ட நபருக்கு அரசாங்க காணியொன்றை குத்தகையின் அடிப்படையில் பெற்றுக்கொள்ள முடியாததாகவுள்ளது.
அமைச்சிற்கு அனுப்பப்பட்ட குத்தகைக்கான சிபாரிசுக்கு அமைச்சர் அவர்களின் அங்கீகாரத்தினை பெற்றுக்கொள்ளும் நடைமுறை எது?
எழுதுவினைஞரால் குத்தகை கோவை பரீட்சிக்கப்பட்டதன் பின்னர் உதவிச் செயலாளர், சிரேஷ்ட உதவிச் செயலாளர் மற்றும் மேலதிக செயலாளரின் சிபாரிசுடன் கௌரவ அமைச்சர் அவர்களுக்கு சமர்ப்பிக்கப்படுகின்றது. இதன்போது காணியின் அளவு ஐந்து (05) ஏக்கரினை விட மேலதிகமாக இருப்பின் செயலாளரின் சிபாரிசினையும் பெற்றுக்கொண்டதன் பின்னர் கௌரவ அமைச்சர் அவர்களின் அங்கீகாரத்திற்கு சமர்ப்பிக்கப்படுகின்றது.
குடியிருப்புத் தேவைக்காக அரசாங்க காணியொன்றை குத்தகைக்கு வாங்குவது எப்படி ?
குடியிருப்புக்காக தேவைக்காக அரசாங்க காணியொன்றை குத்தகைக்கு வாங்குவதற்கு அடிப்படையான நடவடிக்கையாக அவர் வதியும் பிரதேச செயலாளரிடம் கோரிக்கையொன்றை முன்வைத்து காணிக் கச்சேரிக்காக தோற்றுவதற்கு தகைமை பெற்றுள்ளவராக இருத்தல் வேண்டும்.