எங்களை பற்றி

கமத்தொழில், காணி, கால்நடை வளங்கள், நீர்ப்பாசன, கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் அமைச்சு (நிலங்கள் பிரிவு) 1932 இல் அப்போதைய அரசாங்கத்தால் நிறுவப்பட்டது. காணி கொள்கைகளை வகுத்தல் மற்றும் நடைமுறைப்படுத்துதல், அரச காணிகளை பராமரித்தல், காணி உரிமையை தீர்மானித்தல், காணி சுவீகரிப்பு மற்றும் தேவைக்கேற்ப காணிகளை விடுவித்தல் தொடர்பான நடவடிக்கைகளை அமுல்படுத்துவதை அமைச்சு நோக்கமாகக் கொண்டுள்ளது.


மேலும் படிக்க

நோக்கு

நிலைபேறான அபிவிருத்திக்காக சிறந்த முறையில் பயன்படுத்தப்பட்ட நில வளம்

செயற்பணி

சிக்கலற்ற உரித்தையும் உச்ச பயன்பாட்டையும் சகலருக்கும் பெற்றுக் கொடுத்து, அனைத்துத் தரப்பினர்கள் சார்பிலும் கொள்கை வகுத்தல், அமுல் செய்தல் மற்றும் ஒருங்கிணைத்தல் மூலம் நில வளத்தை வினைத்திறன் மிக்கவாறு முகாமை செய்து நிலைபேறான அபிவிருத்திக்குப் பங்களிப்புச் செய்தல்.

பணிகள்

  • காணி மற்றும் காணி அபிவிருத்தி அமைச்சின் கீழுள்ள சட்டவாக்கப்பட்ட நிறுவனங்கள் மற்றும் அரசக் கூட்டத்தாபனங்களினதும் விடயப் பரப்புடன் தொடர்புடைய கொள்கைகள், நிகழ்ச்சித் திட்டங்கள் வகுத்தல், அமுல் செய்தல், பின்னூட்டல், மதிப்பிடல் மற்றும் கண்காணித்தல்
  • அரச காணிகளை நிர்வகித்தல், முகாமை செய்தல், காணி பயன்பாட்டு திட்டமிடல் மற்றும் கண்கானித்தல்
  • காணி நிர்ணயம் செய்தல் மற்றும் காணி உரித்தினை பதிவு செய்வதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளல்.
  • நாட்டின் அபிவிருத்திற்கு தேவையான காணிகளை தாமதமின்றி முறையாக வழங்குதல் தொடர்பாக கண்காணித்தல்
  • காணி சீர்திருத்த ஆணைக்குழுவிற்கு கையளிக்கப்பட்டுள்ள காணிகளை நிர்வாகம் செய்தல் மற்றும் சட்டரீதியாக வழங்குவதை கண்காணித்தல்
  • காணிகளை அளத்தல், நில வரைபடங்களைத் தயாரித்தல் மற்றும் காணி தகவல்கள் மற்றும் உரிய சேவைகளை வழங்குவது தொடர்பில் கண்காணித்தல்

 

நிறுவனக் கட்டமைப்பு

Top